மட்டு. கரடியானாறு பொலிஸ் பிரிவிலுள்ள பங்குடாவெளி பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் அனுமதியின்றி 5 வயது மான் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரை எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய சம்பவதினமான நேற்று இரவு பங்குடா வெளி பிரதேசத்திலுள்ள குறித்த வீட்டை கரடியனாறு பொலிஸாருடன் வனவிலங்கு அதிகாரிகள் முற்றுகையிட்டனர்.
இதன்போது அங்கு மறைத்து வைத்திருந்த சுமார் 5 வயதுடைய மான் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
மேலும் இதன்போது வீட்டின் உரிமையாளரை கைது செய்து அவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முற்படுத்திய போது அவரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மானை வனவிலங்கு திணைக்களத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.