கொழும்பில் 14 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கொழும்பு 07, 08, 10, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு சனிக்கிழமை காலை 08 மணி முதல் 14 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதே வேளை கொழும்பில் 02, 03 மற்றும் 11 ஆகிய பகுதிகள் குறைந்த அழுத்தத்தில் நீரைப் பெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.