கொழும்பு – முகத்துவாரம், அளுத்மாவத்தை வீதியை மறித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த போராட்டத்தை அப்பகுதியை சேர்ந்த மீனவ சங்கத்தினர் மற்றும் மீனவ குடும்பங்கள் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருகடியால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே தமக்கு தேவையான எரிபொருட்களை பெற்றுத்தருமாறு கோரி அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்