உடல் பிடிப்பு நிலையம் என்ற பெயரில் கொழும்பு கொள்ளுப்பிட்டி அல்பிரைட் ஹவுஸ் பிரதேசத்தில் இயங்கிய பாலியல் தொழில் விடுதி ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸார், அதன் முகாமையாளர் உட்பட 10 பெண்களை கைது செய்துள்ளனர்.
கொள்ளுப்பிட்டி பொலிஸார் இந்த விடுதியை முற்றுகையிட்டுள்ளனர். இதன் முகாமையாளராக கந்தானை பிரதேசத்தை 60 வயதான பெண்ணே செயற்பட்டு வந்துள்ளார்.
ஏனைய பெண்கள் 27,32,33,41,42,52 வயதானவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் அத்திட்டிய, களனி, ஓபநாயக்க, கொக்கரெல்ல, பிலியந்தலை, மாத்தறை, கண்டி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த திருமணமான பெண்கள்.
கொழும்பில் உயர் தொழில் செய்வதாக கூறி, இந்த பெண்கள் வீடுகளில் இருந்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
பாலியல் தொழில் விடுதி இயங்கிய கட்டடத்திற்கு மாத வாடகையாக மூன்று லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டு வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.