பம்பலப்பிட்டியில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்த 15 வயது சிறுவனின் உடலில் ஐஸ் எனப்படும் போதை பொருள் கலந்திருந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த சிறுவனின் பிரேத பரிசோதனை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் நடைபெற்றது. கடந்ம 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இந்த சிறுவன் பாடசாலை நிறைவடைந்து வீட்டிற்கு வந்துள்ளார்.
வீட்டிற்கு வந்தவுடன், பெற்றோருக்கு தொலைபேசி அழைப்பேற்படுத்திய சிறுவன், அன்றைய தினம் நடைபெறவிருந்த மேலதிக வகுப்பு நடைப்பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த சந்தர்ப்பத்தில் தான் வெள்ளவத்தை பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டில் தான் இருப்பதாகவும் மகனை அங்கு வருமாறும் தாய் குறிப்பிட்டுள்ளார்.
அன்றைய தினம் மாலை அதே அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியில் வசிக்கும் ஒருவருக்கு திடீரென பாரிய சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக சென்று பார்க்கும் போது சிறுவன் ஒருவர் விழுந்து கிடந்துள்ளதனை அவதானித்துள்ளார்.
சிறுவனின் மரணம் தொடர்பான விசாரணைகள் அருகில் உள்ள சீசீடீவி உதவியுடன் மேற்கொளள்ப்படுவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.