நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாளாந்தம் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கைக்கும் இலங்கையில் பதிவாகியுள்ள நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கைக்கும் தொடர்பில்லை என கூறியுள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே இதனை தெரிவித்தார்.
நாளாந்தம் 100 – 150க்கும் இடையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை பதிவாகியுள்ள போதிலும், உண்மையான எண்ணிக்கை மிகவும் அதிகம் என கூறினார்.
கொரோனா வைரஸால் நாளாந்தம் நான்கு அல்லது ஐந்து இறப்புகள் பதிவாகி வருவதாக டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்தார். பழைய மாறுபாட்டை விட ஐந்து மடங்கு வேகமாக புதிய மாறுபாடு பரவுகிறது என்றும் தற்போதைய நிலைமை மிகவும் ஆபத்தானது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.