காலி – கொழும்பு பிரதான வீதியின் பின்வத்த பிரதேசத்தில் நேற்று (18) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களுத்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறி, எதிர்திசையில் பயணித்த நபர் மீது மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 70 வயதுடையவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதி பின்வத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.