2023 ஆம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் வகுப்புக்கு மாணவர்களை சேர்ப்பதற்கு விண்ணப்பங்களை கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் பிரச்சினை காரணமாக இது தொடர்பில் பெற்றோரிடமிருந்து பல கோரிக்கைகள் கிடைக்கப்பெற்றதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, உரிய விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசித் திகதியை 01.08.2022 வரை நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.