இலங்கையில் இன்றைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே சகல பாடசாலைகளினதும் கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
அதேநேரம் இன்றைய மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு நாளைய தினம் வங்கிகளுக்கு விஷேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அத்துடன், கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் கொடுக்கல் வாங்கல்களும் நாளை இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.