கல்முனையில் வெள்ளைவான் கடத்தல் முயற்சி இடம்பெற்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் அவர் டுவிட்டர் பதிவொன்றையும் இட்டுள்ளார்.
அரச புலனாய்வாளர்கள் என தங்களை அடையாளப் படுத்திக் கொண்ட இனந்தெரியாத நபர்கள் இளைஞர் ஒருவரை வெள்ளைவானில் கடத்திச் செல்ல முயற்சித்தனர் என குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் பிரிவு துணைச் செயலாளரான நிதான்ஷான் என்ற இளைஞரே இவ்வாறு இனந்தெரியாத நபர்கள் கடத்திச் செல்ல முயற்சித்தனர் என சாணக்கியன் வெள்ளை வானின் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்பய்பட்டுள்ளது என சாணக்கியன் தெரிவித்துள்ளார்.