கொழும்பு பிரதேச தேவாலயத்தில் கைக்குண்டை வைத்தவர் தொடா்பில், கர்தினால் மல்கம் ரஞ்சித்தை விட, விசாரணையை முன்னெடுக்கும் அதிகாரிகளுக்கு, எவ்வாறு விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என்பது தெரிந்திருக்கும் என்று பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.
எனவே விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கற்பிப்பதற்கும்,விசாரணைகளுக்கு தடையேற்படுத்தாமலும் இருப்பது உசிதமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கண்டியில் இன்று செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனை குறிப்பிட்டார்.
விசாரணைகளை நடத்தும்போது உடனடியாக அதில் முடிவைக் காணமுடியாது.
எனவே சம்பவம் தொடர்பில் 24 மணித்தியாலங்களுக்குள் சம்பவம் தொடர்பில் முடிவைக் கோருவது யதார்த்தமாக இருக்காது என்று கமல் குணரட்ன குறிப்பிட்டார்.
இந்த சம்பவத்தின் பின்னர், காவல்துறை அதிபரின் ”கோட்”டை கழற்றிவிட்டு செல்லுமாறு கூறுவதற்கு உரிமையில்லை.
அந்த ”கோட்“ டை அவர் வழங்கவில்லை.
எனினும் நாட்டில் உள்ள ஜனநாயகத்தின் அடிப்படையில் கர்தினால் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தநிலையில் இதனை ஏற்று காவல்துறை அதிபரும் அதனை செய்யப்போவதில்லை என்று கமல் குணரத்ன தெரிவித்தார்.