இங்கிலாந்தின் அடுத்த மகாராணியாக, இளவரசர் சார்ல்ஸின் மனைவியான கமிலா பட்டம் சூட்டவேண்டும் என்று இங்கிலாந்து மகாராணி 2-ம் எலிசபெத் தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளார்
95வயதான, இங்கிலாந்து நாட்டில் ராணியாக இருக்கும் 2-ம் எலிசபெத், இங்கிலாந்து மன்னராக இருந்த ஆறாம் ஜோர்ஜின் மகளாவார்.
மன்னர் ஆறாம் ஜோர்ஜ், 1952-ம் ஆண்டு பெப்ரவரி 6ம் திகதி இறந்த பின்னர், 2-ம் எலிசபெத்,தமக்கு 25வயதாக இருக்கும் போது மகாராணி பட்டத்தை பெற்றார்
தற்போது அவர் மகாராணி பட்டத்துக்கு வந்து 70 ஆண்டுகள் ஆகின்றன.
இதனை முன்னிட்டு இங்கிலாந்து முழுவதும் வரும் ஜூன் மாதம் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன.
இந்தநிலையில் மகாராணி விடுத்துள்ள செய்தியில், இளவரசர் “சார்லஸ் மன்னர் ஆகிறபோது, மகாராணி பட்டத்தை கமிலா பெற வேண்டும் என்பது எனது உண்மையான விருப்பம்” என தெரிவித்துள்ளார்.