கதிர்காமக்கந்தன் கோயில் சம்பந்தமான பின்வரும் விண்ணப்பத்தை மனுதார் (செ. சுந்தரலிங்கம் உயர் நீதி மன்றத்தில் 1977-ம் ஆண்டு தாக்கல் செய்துள்ளார்:-
“பிரசித்த நொத்தாரிசு ஜே. கதிரமான் 1898-ம் ஆண்டு மார்ச் மாதம் 9-ம் திகதி எழுதி கைச்சாத்திட்ட 2317 இலக்க உறுதியின் சட்டதிட்ட நிபந்தனைகளின் பிரகாரம் மேலே சொல்லப்பட்ட கதிர்காமக் கோயில்களின் சில கட்டடங்கள், காணி பூமிகள் சட்டரீதியாக நியமிக்கப்பட்ட தர்மகர்த்தாவும், அவற்றை நிர்வகித்து நடத்த உரிமை பெற்றவருமான தத்தாரமகிரி சுவாமியை வெளியேற்றி விட்ட மேற்குறிப்பிட்ட கட்டடங்களையும் நிலபுலன்களையும் உரிமைகொண்டாடி தனக்கே சொந்தமாக்கி கொள்ள முதல் பிரதிவாதி (பிக்க சித்தார்த்த தேரோ) முயற்சித்து வருகிறார்.
மூல உறுதியின் உண்மையான பிரதி P (பி) இலக்கமிட்டு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
முதல் பிரதிவாதி சட்டவிரோதமான முறையில், தீய நோக்குடன் சரியானவற்றை செய்யாமலும் பிழையானவற்றை செய்தும் பல தீச்செயல்கள் புரிந்துள்ளார். அவற்றில் சில வருமாறு :-
(1) வேதிகித்திகந்த என்படும் கதிரைமலை உச்சியிலுள்ள கதிர்காமக் கந்தனை வழிபடச் செல்வோர் எத்தனையோ நு}ற்றாண்டு காலமாக மலையேறிய பாதையை தடுத்தும் மறித்தும் பக்தர்களை மேலே செல்லவொட்டாது இடையூறுகள் பல விளைத்துள்ளார்
(2) 1946-ம் ஆண்டில் தத்தாராமகிரி சுவாமி மலையேறும் வழியில் உள்ள விநாயகர் கோயிலை புதுப்பிக்க முயற்சித்தபொழுது, முதல் பிரதிவாதியும் மற்றும் சில பௌத்த குருமாரும் சில கப்புறாளைகளை ஏவிவிட்டு கட்டவிடாது குந்தகம் செய்தனர். அமைதிக்கு பங்கமேற்பட்டு தத்தாராமகிரி சுவாமி உட்படப் பலர் காயமுற்றனர்!
(3) 1952-ம் ஆண்டில் கொழும்பில் உள்ள இராம கிருஷ்ண மடத்தினர் கதிர்காமக் கந்தன் கோயில் காணி யொன்றில் யாத்திரீகர்கள் தங்கி சுவாமியை வழிபட வசதிகள் செய்து மடம் ஒன்றை நிறுவினர். முதல் பிரதிவாதி பல சூழ்ச்சிகள் செய்து கிராம சேவகனின் இரகசிய ஆதரவுடன் சைவ அன்பர்கள் மடத்தில் தங்கி வழிபாடு செய்வதற்கு பலவித இன்னல்களையும் இடையூறுகளையும் விளைவித்தார்!
(4) 1952-53 வருடத்தில் யாத்திரீகர்கள், அன்பர்களின் வசதிக்காக மேற்கூறிய தத்தாராமகிரி கோயில் கிணற்று நீரை மேலே தொட்டியொன்று கட்டி அதில் சேமித்து வைத்தார். 1972-ம் ஆண்டில் அன்றைய அரசாங்கத்தின் ஆணையின் பேரில் அதன் ஏஜண்டுகளும், அதிகாரிகளும், சேவகர்களும், தண்ணீர் தொட்டியை உடைத்தெறிந்தனர்@
(5) 1970-ம் ஆண்டு ஏப்ரல் – மே மாதங்களில் தத்தாராமகிரி சுவாமி தடு;ப்புக்காவலில் பௌத்தர்களாலும் ராணுவத்தினராலும் வைக்கப்பட்டார். கோயில் கட்டடங்கள் சூறையாடப்பட்டன@ முக்கிய தஸ்தாவேஜுகளும் கணக்கு வழக்குப் புஸ்தகங்களும் கையாடப்பட்டன. தெய்வயானை அம்மன் கோயிலி; இரத்தினாபரணங்கள் கொள்ளையிடப்பட்டன. சொற்ப நகைகளே மீண்டும் கைக்கு வந்தன
(6) 1970-ம் ஆண்டின்போது வேதிகித்திகந்த எனப்படும் கதிரைமலையிலுள்ள கோயிலை அதன் சட்டரீதியான நிர்வாகியிடமிருந்து முதல் பிரதிவாதியும் அவரின் சகாக்களும் பலவந்தமாகக் கைப்பற்றினர்
(7) தத்தாராமகிரி சுவாமி சுமார் இரண்டு இலட்சம் ரூபா செலவில் கட்டிய கட்டடங்களையெல்லாம் தகர்த்தெறியும்படி அரசாங்கம் 1972-ம் ஆண்டில் உத்தரவிட்டது. பல நு}ற்றாண்டுகளாக மகாதேவாலயம் இருந்த காணியைக் கூட சுவீகரிக்கப்போவதாக அரசாங்கம் அறிக்கைவிடுத்தது
(😎 தத்தாராமகிரி சுவாமியின் பொறுப்பிலுள்ள கோயில் காணிகளுக்குள் முதல் பிரதிவாதியும் பௌத்த சாமிகளும் அத்துமீறி பிரவேசித்து ஆக்கிரமித்துக் கொண்டனர்
(9) கதிர்காமக் கந்தன் கோயில் பகுதியிலிருந்து சகல இந்துக்களையும் விரட்டிவிட்டு கதிர்காமத்தில் உள்ள சகல கோயில்களையும் அவற்றின் சொத்துக்களையும் தாம் கைப்பற்றப் போவதாக முதல் பிரதிவாதியும் அவர் கூட்டத்தினரும் ஒளிவு மறைவின்றி வெளிவெளியாக வீம்பு பேசினர்.
(10) விஷ்ணு கோயிலில் உள்ள விஷ்ணு விக்கிரகத்தை நீக்கிவிட்டு புத்தரின் விக்கிரகத்தை அங்கே வைக்குமாறு முதல் பிரதிவாதி கப்புறாளைகளை ஏவிவிட்டு செய்வித்தார்.
(11) தத்தாராமகிரி சுவாமியின் பொறுப்பில் உள்ள சுமார் 346 ஏக்கரா கோயில் காணி நிலங்களில் குடியிருந்தோரையும் பயிர் செய்தோரையும் அவரவர்கள் செலுத்த வேண்டிய வாடகைப் பணத்தையும் கோயில் மான்யத்தையும் கொடுக்கவிடாதவாறு பலாத்கார வழிகளைக் கையாண்டார்.
(12) வேதிகித்திகந்த எனப்படும் கதிரைமலையுள்ள 26 ஏக்கரா காணியையும் அதிலுள்ள அசையும் அசையா பொருட்களையும் தனக்கும் தன் சந்ததிக்கும் ஆட்சியுரிமை வழங்கி 1978-ம் ஆண்டு பெப்ரவரி 4-ம் திகதி – இலங்கை சுதந்திரதினம் – தர்மசாஸனம் செய்து கொடுக்குமாறு முதல் பிரதிவாதி ஜனாதிபதியை து}ண்டி முயற்சி செய்தார். இச்செய்தி 1978-ம் ஆண்டு ஜனவரி 29-ம் திகதி வெளியான “சிலோன் ஒப்சேவர்” பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. ஆனால் முதல் பிரதிவாதி “வேதிகித்திகந்த பற்றி எது நடைபெறுமென எதிர்பார்த்தாரோ அது உண்மையில் நடைபெறப் போவதில்லை யென்று” ஜனாதிபதி இவ்விண்ணப்பதாரருக்கு (செ. சுந்தரலிங்கம்) அறிவித்துள்ளார்.
முதல் பிரதிவாதியின் கொட்டத்தை அடக்க அவருக்கு தடையுத்தரவு பிறப்பிக்காவிடின் மேற்கூறிய சதிகள், சூழ்ச்சிகள், ஆக்கிரமிப்புகள், வன்செயல்கள் மீண்டும் தலைது}க்கிய வண்ணமே இருக்குமென இவ்விண்ணப்பதாரர் குறிப்பிட விரும்புகிறார். 1955-ம் ஆண்டளவில் இரண்டாவது பிரதிவாதிக்கு (பிரதமர் ஆர். பிரேமதாசா) முன் பதவிவகித்த எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயகா, உள்çர் அரசாங்க மந்திரி என்ற ஹோதாவில் கோயிலுக்குரிய காணிகளையும், கட்டடங்களையும், தலங்களையும் பட்;டின அபிவிருத்திக்குட்பட்ட பிரதேசமாக்குவதற்கு உத்தரவிட்டிருந்தார்.
நாடு நகர திட்டமிடல் சட்டத்தின் கீழ் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டதென கூறப்பட்டாலும், 38வது செக்ஷன் முதலாவது அனுபந்தம் வழங்கும் சட்டபாதுகாப்புகளையும் மீறி ஏஜண்டுகளும், அதிகாரிகளும் மற்றும் சேவர்களும் சட்டத்திற்கு புறம்பான, விரோதமான செயல்களில் ஈடுபட இவ்வுத்தரவுகள் இடமளித்துள்ளன.
1966-ம் ஆண்டு ஜுலை 20-ம் திகதி வெளியான 10,953 இலக்க அரசாங்க கஜெட்டில் நாடு நகர திட்டமிடல் சட்டத்தின் 21-வது செக்ஷன், 6(2) செக்ஷன் ஆகியவற்றில் போர்வையின் கீழ் இரண்டாவது பிரதிவாதி (பிரதமர் பிரேமதாசா) மேற்கூறிய அடாத்தான செயல்களை வன்மத்துடன் புரிந்துள்ளார்.
இரண்டாவது பிரிதிவாதியின் கட்டளையின் பேரிலோ அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஏஜன்டுகள், அதிகாரிகள், கைக்கூலிகள், சேவகர்கள் ஆகியோரின் து}ண்டுதலின் பேரிலோ அல்லது அவர்களின் சம்மதத்துடனோ இவ்விண்ணப்பதாரரின் சமய நம்பிக்கைகளும் உரிமைகளும் கதிர்காமத்தில் மறுக்கப்படுவதற்கும் அங்கு இன்று நடைபெறும் அக்கிரமங்களுக்கும் அநீதிகளுக்கும் பிரதம மந்திரி என்ற முறையிலும் உள்çர் ஆட்சி வீடமைப்பு மந்திரி என்ற முறையிலும் அவர் பொறுப்பாளியாவர்@ அவர் பதில் சொல்லி ஆகவேண்டும். அரசியல் ரீதியில் பரிகாரம் தேட எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.