நேற்றுடன் முடிவடைந்த கடந்த ஏழு நாட்களில், 5,391 கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதே காலப்பகுதியில், கொவிட் தொற்று காரணமாக 87 மரணங்கள் சுகாதாரப் பிரிவினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, நாட்டில் மொத்த கொவிட் நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை 601,048 ஆக அதிகரித்துள்ளதுடன், அவர்களில் 575,932 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொவிட் தொற்று காரணமாக இதுவரை மொத்தம் 15,284 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.