பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் குறித்த இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்தை ஒரு மாத காலத்துக்கு ஒத்திவைக்க நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழு தீர்மானித்தது.
அமைச்சர் (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் நேற்று (17) நடைபெற்ற அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் குறித்த இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்தை ஒரு மாததத்துக்கு ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், புனர்வாழ்வுப் பணியகம் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு தொடர்பில் முன்வைக்கப்பட்ட திருத்தங்களுக்கு அமைய குறித்த சட்டமூலத்துக்கு குழு அனுமதி வழங்கியது. இதற்கு அமைய புனர்வாழ்வு பணியகம் சட்டமூலம் இன்று (18) பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.