திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவில் உள்ள சேனையூர் பகுதியில் உள்ள வீடொன்றில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வந்த சாராயம், பியர் போத்தல்களுடன் பெண்ணொருவரை சம்பூர் பொலிஸார் நேற்று (03) இரவு அவரின் வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.
இதன்போது பியர் போத்தல்கள் 66, பியர் டின் 49, சீல் சாராயம் 11 போத்தல்கள் என்பவற்றுடன் 36 வயதுடைய பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பூர் – சேனையூர் பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் மற்றும் பியர்கள் விற்பனை செய்யப்படுவதாக சம்பூர் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டினை பொலிஸார் முற்றுகையிட்டு சோதனைக்கு உட்படுத்தியபோது சட்டவிரோத மது பானங்களுடன் குறித்த வீட்டில் இருந்த பெண் கைது செய்யப்பட்டதாக சம்பூர் பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைது செய்யப்பட்ட பெண் சம்பூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இவரை மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.