வாழைச்சேனை கல்குடா பிரதேசத்துக்கு கொண்டு வரப்படவிருந்த ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் 31 வயதுடைய இருவர் சம்மாந்துறையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய நீலாவணை விஷேட அதிரடிப் படையினரோடு இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இருவரும் கைது செய்யப்பட்டனர்.
போதை மாத்திரை கொண்டு வர பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டதுடன், இருவரும் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.