ஐபிஎல் வீரர்கள் ஏலத்துக்கு முன்னதாக இலங்கை – இந்தியா ரி20 போட்டியை நடத்தியிருந்தால், இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானகவை வாங்க சில அணிகளிடம் போதிய பணம் இருந்திருக்காது என இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் உரையாற்றி அவர், இலங்கை இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ரி20 போட்டியில் இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானகவின் துடுப்பாட்ட பாணியைக் கருத்தில் கொண்டு மிகவும் மதிக்கப்பட வேண்டிய வீரர் என்பதை நிரூபித்தார்.
தசுன் ஷானக் வெளிப்படுத்திய துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு திறமையினால் இரு நாடுகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற முடிந்தது.
சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில், அடிப்படைத் தொகையான 50 லட்சம் இந்திய ரூபாய்க்கு ஏலத்தில் விடப்பட்ட தசுன் ஷானகவை எந்த அணியும் வாங்கவில்லை.