2022ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் T20 உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு பின்வரும் அணியைத் தேர்ந்தெடுத்துள்ளது.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க இந்த அணிக்கு தனது ஒப்புதலை வழங்கினார்.
2022 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் திகதி முதல் நவம்பர் 13 ஆம் திகதி வரை ஆஸ்திரேலியாவில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
15 பேர் கொண்ட அணி:
கேப்டன் தசுன் சானக்க, தனுஷ்க குணதிலக்க, பாத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ் – விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன், சரித் அசலங்கா, பானுகா ராஜபக்ச – விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன், தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்க, மகேஷ் தீக்ஷனா, ஜெஃப்ரி வாண்டர்சே, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர (உடற்தகுதிக்கு உட்பட்டது), லஹிரு குமார (உடற்தகுதிக்கு உட்பட்டது), தில்ஷான் மதுஷங்க, பிரமோத் மதுஷன்.
காத்திருப்பு வீரர்கள்:
அஷேன் பண்டார, பிரவீன் ஜெயவிக்ரம, தினேஷ் சண்டிமால், பினுர பெர்னாண்டோ, நுவனிது பெர்னாண்டோ
இதேவேளை, அஷேன் பண்டார மற்றும் பிரவீன் ஜயவிக்ரம ஆகியோர் அணியுடன் பயணிக்கவுள்ளனர்.