கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்லெட் (Michelle Bachelet) அம்மையாரை ஜெனீவாவில் சந்தித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஜெனீவாவில் ஆரம்பித்துள்ள நிலையில், இந்த சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து பேராயர் மிச்செல் பச்லெட் அம்மையாருக்கு (Michelle Bachelet) விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, அண்மையில் வத்திக்கானுக்கு விஜயம் செய்த பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, திருத்தந்தை பிரான்சிஸிஸை சந்தித்திருந்தார்.
மேலும் , அவரிடமும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து தெளிவுபடுத்தியிருந்ததாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது