ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் புதிய தலைவர் ஒருவர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்தநிலையில் விரைவில் அது தொடர்பான அறிவித்தல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக 2019ஆம் ஆண்டு முதல் அந்த அமைப்பின் தலைவராக செயற்பட்டு வந்த அபு இப்ராஹிம் அல்-ஹஷிமி அல்-குரேஷி நேற்று உயிரிழந்ததாக அமெரிக்க ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதிகள், சிரியாவிலும், ஈராக்கிலும் கடந்த 2014-ஆம் ஆண்டில் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றினர்
அதனைத் தொடா்ந்து சிரியாவிலும், ஈராக்கிலும் அவர்களை ஒடுக்குவதற்காக அமெரிக்கா இராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை உருவாக்கிய அபு பக்கா் அல்-பாக்தாதியை சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் அமெரிக்க படையினா் கடந்த 2019-ஆம் ஆண்டு சுற்றிவளைத்தபோது, அவா் குடும்பத்தினருடன் தற்கொலை செய்துகொண்டாா்.
அதனைத் தொடா்ந்து, அந்த அமைப்பின் தலைவராக அபு இப்ராஹிம் அல்-ஹஷிமி அல்-குரேஷி பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இந்தநிலையில், அமெரிக்காவின் சிறப்பு அதிரடிப் படையினர், வடமேற்கு சிரியாவில் நேற்று நள்ளிரவில் நடத்திய அதிரடித் தாக்குதலின்போது, தமது வீட்டை அமெரிக்கப் படைகள் சுற்றி வளைத்ததை அறிந்து கொண்ட, அபு இப்ராஹிம் அல்-ஹஷிமி அல் – குரேஷி,வெடிகுண்டை வெடிக்கச் சென்று, தனது குடும்பத்தினருடன் தாமும் உயிரை மாய்த்துக்கொண்டார்.
அமெரிக்க படையினரின் தாக்குதல் நடவடிக்கையின்போது ஐ.எஸ். அமைப்பின் முன்னாள் தலைவா் அபு பக்கா் அல்-பாக்தாதியை போலவே அபு இப்ராஹிம் அல்-ஹஷிமியும் வெடிகுண்டை வெடிக்கச் செய்து பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினரைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவா் தெரிவித்துள்ளார்
இந்த சம்பவத்தில் 6 சிறுவா்கள், 4 பெண்கள் உள்பட 13 போ் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.