இலங்கைக்கு LNG வழங்கும் ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு வழங்கப்பட்டுள்ளமை நீண்டகால சதித்திட்டத்தின் ஆரம் பம் என லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ விதாரண கூறியுள்ளார்.
இது நாட்டின் பொருளாதாரத்தை அமெரிக்காவின் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவரும் என்றும், MCC ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைப் போன்றே முழுமையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த உடன்படிக்கையின் மூலம் இங்கு அமெரிக்க இராணுவத் தளத்தை அமைக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலைமை மேலும் அதிகரிக்க இடமளித்தால் இலங்கை எதிர்காலத்தில் ஆபத்தான நிலைக்குச் செல்ல வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்கியமை குறித்தும் இலங்கைக்கு LNG விநியோகம் தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.