தற்போது வழங்கப்பட்டுள்ள விலையின்படி, ஒரு லிட்டர் டீசலினால் அரசாங்கத்திற்கு 12 ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி சானக தெரிவித்துள்ளார்.
இன்று (09) பாராளுமன்றத்தில் எண்ணெய் விலை சூத்திரம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர விலை சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலையை மாற்றுவதாக உறுதியளித்ததாகவும், ஆனால் இம்முறை விலைச்சூத்திரத்தின்படி எவ்வித மாற்றமும் ஏற்படாது என அறிவித்ததன் மூலம் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் ஹேஷா விதானகே தெரிவித்தார்.