நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கொழும்பு – கட்டுநாயக்க 18ஆவது மைல் பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றின் மீது சாணம் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
விமான நிலையத்தினால் வழங்கப்பட்ட முன்னுரிமைக் கடிதங்களைப் பெற்றவர்களுக்கு மாத்திரம் எரிபொருள் விடுவிக்கப்பட்டமையால் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விமான நிலையத்தைத் தவிர, மற்ற தனியார் வாகனங்களும் அந்த இடத்தில் எரிபொருள் நிரப்பின. எனினும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவது நிறுத்தப்பட்டதாகத் தெரிய வருகிறது.
இதனையடுத்தே சாணம் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.