இலங்கையில் மீண்டுமொரு முறை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்க போவதில்லை என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 1-ம் திகதி முதல் வீட்டு பாவனை மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான சமையல் எரிவாயு கொள்கலன்களை வழமைப்போல விநியோகிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் சில பகுதிகளில் சமையல் எரிவாயு கொள்கலன்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகின்றது.
இருப்பினும், அது தொடர்பில் கண்காணிப்புக்கள் இடம்பெறுகின்றன. நாடு பூராகவும் மீண்டும் சமையல் எரிவாயு கொள்கலன்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்க போவதில்லை.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 1-ம் திகதி முதல் சகல முகவரகங்களிலும் எரிபொருள் கொள்கலன்களை தட்டுப்பாடு இன்றி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.