கடலில் மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து கொள்கலன்களை அகற்றும் பணி ஆரம்பமாகியுள்ளது.
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் உரிமை நிறுவனம், இந்த பணிகளை வேறு இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.
தீ விபத்து காரணமாக இலங்கைக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகை குறித்தும் திருமதி தர்ஷனி லஹந்தபுர விளக்கமளித்தார்.
“கடலில் மூழ்கிய எக்ஸ்பிரஸ் பெர்ல் கப்பலில் இருந்து கடற்பரப்பில் சிதறிக் கிடக்கும் கொள்கலன்களை அகற்ற கப்பலின் உரிமையாளரின் நிறுவனம் தற்போது இரண்டு நிறுவனங்களை நியமித்துள்ளது. அதன்படி, கடலுக்கு அடியில் சிதறி கிடக்கும் கொள்கலன்களை அகற்றும் பணியை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியுள்ளது. குறித்த அமெரிக்க நிறுவனம் தற்போதைய நிலையில் இலங்கை கடற்பரப்பில் தமது பணிகளை ஆரம்பித்துள்ளது. அதே நேரத்தில், ஷாங்காய் சால்வேஜ் நிறுவனத்திற்கு இடிபாடுகளை அகற்றும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இம்மாதம் 19ஆம் திகதிக்குள் எமது கடற்பரப்பிற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது”.