உலகிலேயே மிகவும் அரிதான இரத்த வகையான தங்க இரத்தம் கொண்ட மலேசிய பெண் இணையத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளார்.
“தங்க இரத்தம்” என்று அழைக்கப்படும், Rhnull இரத்த வகை உலகளவில் 43 பேரில் மட்டுமே காணப்படுகிறதாக கூறப்படுகின்றது. மலேசியாவின் திரங்கானு மாநிலத்தைச் சேர்ந்த குறித்த பெண் மட்டுமே, மலேசியாவில் தங்க இரத்தமுடையவர்.
இந்நிலையில் அப் பெண் திரங்கானு இரத்த வங்கியில், இரத்த தானம் செய்துள்ளதாக இரத்த வங்கியின் பேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் தானம் செய்த இரத்தம் கோலாலம்பூரில் உள்ள தேசிய இரத்த வங்கிக்கு அனுப்பப்படும். அங்கு அங்கு நைட்ரஜன் நிரப்பப்பட்ட கொள்கலனில் -80 டிகிரியில் 10 ஆண்டுகளுக்கு சேமிக்கப்படும் என்று திரங்கானு இரத்த வங்கி தெரிவித்தது.
அத்துடன் யாரேனும் நோயாளிக்கு அந்த இரத்த வகை தேவைப்பட்டால், அது பயன்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை Rhnull இரத்தத்தின் சிவப்பணுக்களில் Rh புரதம் அறவே இருக்காது.
மேலும் குறித்த வகை இரத்தம் முதன்முதலில் 1961 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய பழங்குடியின பெண் ஒருவரிடமே கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது