இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர 2022 உலகக் கிண்ண ரி 20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் உலகக் கிண்ண ரி 20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகக் கிண்ண ரி 20 கிரிக்கெட் போட்டிகளில் நேற்று (18) ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலேயே அவர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.