உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் கைதான நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார் .
இந்நிலையில் குறித்த நபர் மரணமடைந்தமை தொடர்பில் பொரளை பொலிஸார், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.
உயிரிழந்தவர் கல்முனை, பள்ளியவீதியை வசிப்பிடமாகக்கொண்ட 42 வயதான சல்லி மொஹமட் கலின் (சந்தேகநபர் இலக்கம் 1123) என, நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
திடீரென சுகயீனமடைந்த மேற்படி சந்தேகநபர், நவம்பர் மாதம் 23 ஆம் திகதியன்று சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றபின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு டிசெம்பர் 5ஆம் திகதியன்று மாற்றப்பட்டிருந்தார்.
இந்நிலையிலேயே, குறித்த சந்தேகநபர் மரணமடைந்துள்ளார் என நீதிமன்றத்துக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.