உக்ரைன் பெண்களைதகாத தொழிலுக்காக விற்பதற்கு , உக்ரைனில் இருந்து வெளியேறிய அழகான பெண்களை கடத்தல்காரர்கள் குறிவைத்துள்ளதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரினால் 35 லட்சத்திற்கும் அதிகமான யுக்ரேன் மக்கள் எல்லை தாண்டி வெளியேறியுள்ளனர். இவ்வாறு வெளியேறியவர்களுள் பெண்கள், குழந்தைகளே அதிகம் உள்ளனர். ஏனெனில், 60 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் தொடர்ந்து போராட வேண்டிய கட்டாயத்தை யுக்ரேனிய அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.
பெண்களும் குழந்தைகளும் ஒரு பயங்கரமான போரிலிருந்து தப்பிக்க அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள். அவர்களுக்கு போலிஷ் அல்லது ஆங்கில மொழி தெரியாது.
யார் என்ன சொன்னாலும் அவர்கள் நம்புகிறார்கள். இந்நிலையில் தகாத தொழிலுக்காக விற்பதற்கு , உக்ரைனில் இருந்து வெளியேறிய அழகான பெண்களைத் தேடி பலர் வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகளே கடத்தல்காரர்களின் இலக்குகள் என ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் (António Guterres) ட்விட்டரில் எச்சரித்துள்ளார்.
அதேவேளை மனித வேட்டையாளர்களுக்கும் ஆள் கடத்தல்காரர்களுக்கும் யுக்ரேனில் நடக்கும் போர் ஒரு சோகம் அல்ல என சுட்டிக்காட்டப்பட்டுள்ள அதேவேளை, யுக்ரேன் மற்றும் அண்டை நாடுகளில் அமைதி காலத்தில் கடத்தல் வட்டங்கள் பிரபலமாக இருந்ததாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.