இலங்கையில் எதிர்காலத்தில் பெண் பொலிஸ் மா அதிபர்களின் கீழ் பணியாற்ற பொலிஸார் தயாராக வேண்டும் என பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கடந்த 26-04-2023ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் தொடர்பான குழுக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தக் குழு லசந்த அழகியவன்ன தலைமையில் கூடியது.
7 ஆண்டுகளுக்குப் பின்னர், பொலிஸார் அன்றைய தினம் கணக்குக் குழுவுக்கு வரவழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

