தற்போது புதிய வகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவிட் மற்றும் டெங்கு அல்லாத வேறு புதிய வகை வைரஸ் காய்ச்சல் சமூகத்தில் பரவி வருவதாக சுகாதார மேம்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் ரஞ்சித் படுவன்துடுவாவ தெரிவித்துள்ளார்.
காய்ச்சல் ஏற்பட்டால் 1390 மற்றும் 247 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. பெரியவர்கள் மத்தியிலும் சிறுவர்கள் மத்தியிலும் இந்த வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக தெரிவித்துள்ளார்.
அனைவரும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு கோரியுள்ளார். இறுமல், உடல் வலி மற்றும் சளி போன்ற நூய் அறிகுறிகள் தென்பட்டால் 1390/247 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளாது வீட்டிலேயே இருந்தால் நோய் தீவிரமடைந்து மரணம் கூட நேரிடும் அபாயம் காணப்படுவதாக டெடாக்டர் படுவான்துடுவாவ எச்சரிக்கை விடுத்துள்ளார்.