விடுதிக்கு தனது காதலனுடன் பயணித்த உக்ரைனிய யுவதியை தகாத முறையில் துன்புறுத்திய இளைஞர்கள் கைது.
டிக்வெல்ல சுற்றுலாப் பகுதியிலுள்ள பெஹெம்பிய கடற்கரை வீதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் இரவு 9 மணியளவில் விடுதிக்கு தனது காதலனுடன் பயணித்த உக்ரைனிய யுவதியை தகாத முறையில் துன்புறுத்திய சந்தேகத்தின் பேரில் இளைஞரை திக்வெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவத்தையடுத்து, இந்த ஜோடி உதவி கோரி கூக்குரலிட்டனர். இதையடுத்து, அருகில் தங்கியிருந்த இளைஞர்கள் குழுவொன்று சம்பவ இடத்திற்கு ஓடிச் சென்றபோது, சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார்.
எனினும், இளைஞர்களால் அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர் பின்னர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
இதன்படி டிக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான சந்தேக நபர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.