இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) உலக எரிபொருள் விலையேற்றம் காரணமாக பெப்ரவரி மாத இறுதிக்குள் சுமார் 11 பில்லியன் ரூபா நட்டத்தை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக எரிபொருள் விலையை உடனடியாக அதிகரிக்குமாறும் அல்லது எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிச்சலுகையை வழங்குமாறும் கூட்டுத்தாபனம் நிதியமைச்சிடம் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் எரிபொருள் வர்த்தகத்தில் ஏற்பட்ட இழப்பினால் CPC க்கு டொலர்கள் நஷ்டம் ஏற்படுவதால் நாட்டுக்குத் தேவையான எரிபொருள் இறக்குமதி கூட நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது