2021 (2022) ஆம் ஆண்டுக்கான ஆரம்ப பிரிவெனாக்களின் இறுதிப் பரீட்சையின் விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்கான விண்ணப்பங்கள் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.
இது இன்று (16) முதல் இணையத்தளத்தின் ஊடாக மாத்திரம் கோரப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் விண்ணப்பங்களை பெப்ரவரி 15 ஆம் திகதி வரை அனுப்பி வைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.