மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு கீழ் பணிபுரியும் பணியாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பற்றிய சில சூட்சமங்கள் புரிய வரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களால் முடியாது என்று நினைத்த காரியம் ஒன்று சாதிக்க இருக்கிறீர்கள். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் உங்களுடைய இனிமையான அணுகுமுறையால் மற்றவர்களை எளிதாக கவர்ந்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நினைத்த வேண்டுதல்கள் நிறைவேறும். ஆரோக்கியம் சீராகும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் உங்களுடைய பங்களிப்பு அதிகரிக்கும். பெற்றோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை ஓங்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். உத்தியோகத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு புதுமையை வெளி உலகிற்கு கொண்டு வரக்கூடிய வாய்ப்புகள் அமையும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுமை தேவைப்படக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் விமர்சனங்களை தவிர்த்து வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும் நல்ல நாளாக அமைய இருக்கிறது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்கள் தங்களுடைய பணி நிமித்தமாக வீண் அலைச்சலை சந்திக்கலாம். உத்யோகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கடின உழைப்பால் முன்னேற கூடிய வாய்ப்புகள் அமையும் என்பதால் பொறுப்புணர்வுடன் செயலாற்றுவீர்கள்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய அனுபவ ரீதியான பேச்சாற்றல் மற்றவர்களை கவரும் வண்ணம் அமையும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுப்பதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் துடிப்புடன் செயல்பட கூடிய நாளாக அமைய இருக்கிறது. இனம் புரியாத மகிழ்ச்சி உள்ளுக்குள் இருக்கும். ஆரோக்கியம் சீராகும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஆரோக்கிய ரீதியான சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கூடுமானவரை வெளியிட பயணங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி இடையே தேவையற்ற பேச்சுவார்த்தைகள் அதிகரிக்கும் என்பதால் நிதானத்துடன் இருப்பது நல்லது. சுயதொழில் எதிர்பார்க்கும் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் திறமையை மேலும் மெருகேற்றிக் கொள்வீர்கள்.
விருச்சிகம்:
விசிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சோர்வு நீங்கிப் புத்துணர்வுடன் செயல்பட கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் எதையும் ஒரு முறைக்கு இரு முறை யோசித்து விட்டு பேசுவது நல்லது. தேவையற்ற வீண் பழிகள் ஏற்படாமலிருக்க விழிப்புணர்வு தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எடுக்கும் முயற்சிகளில் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு சிறப்பாக அமைய இருக்கிறது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சில தடை தாமதங்கள் பிறகு எதிர்பார்த்தது பூர்த்தி அடையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக போட்டியாளர்கள் உடன் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சமயோசிதமாக செயல்படுவதன் மூலம் சில பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும். தடைப்பட்ட சுப காரியங்களில் வெற்றி காணலாம். கணவன் மனைவி இடையே சவாலான விஷயங்களை எதிர்கொள்வதற்கு சூழ்நிலை உருவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வல்லுனர்களின் ஆலோசனை கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியிடங்களில் மதிப்பு அதிகரிக்கும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கோபத்தை கட்டுப்படுத்தாவிட்டால் தேவையற்ற இழப்புகளை சந்திக்க நேரலாம் என்பதால் மௌனம் காப்பது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தங்கள் திறமைக்கு உரிய பாராட்டுகள் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் இணக்கமாக செல்வது நல்லது. எதிர்பாராத சமயங்களில் நண்பர்களின் உதவிகரம் கிடைக்கும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தொலை தூர இடங்களிலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களை கவர்வதில் நாட்டம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வருமானம் பெருகும். கணவன் மனைவியிடையே இருக்கும் பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.