மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய பலன்களை கொடுக்கக்கூடிய அற்புதமான நாளாக இருந்து வருகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து பண வரவு வருவது கால தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நிகழும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல பலன்களைக் கொடுக்கக் கூடிய நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் புதிய விஷயங்களில் தைரியமாக இறங்கி செயல்படலாம். தொட்டதெல்லாம் துலங்கும் அற்புதமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற பேச்சு வார்த்தைகளை தவிர்ப்பது உத்தமம்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். பொருளாதார ரீதியான ஏற்றம் வீட்டுத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்ய உதவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகளில் நண்பர்களுடைய ஆதரவு கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் வெளியிட பயணங்களின் பொழுது சற்று கவனத்துடன் இருப்பது நல்லது.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்க்கும் அளவிற்கு லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் மூன்றாம் நபர்களை நம்பிப் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் இணக்கத்துடன் செல்வது நல்லது. முன்கோபத்தை குறைத்துக் கொண்டால் கணவன் மனைவிக்கு இடையே அன்பு பெருகும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் குதூகலம் காணப்படும். உறவினர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதக பலன் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்கள் உடைய மன நிலையில் சீரற்ற தன்மை ஏற்படலாம். எதையும் நிதானமாக யோசித்து செயல்படுவது நல்லது.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை அடையும் அற்புத நாளாக இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமையும். குடும்பத்தில் இறைவழிபாட்டில் கவனம் அதிகரித்து காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதை செய்யவேண்டும் எதை செய்யக்கூடாது என்கிற தெளிவான முடிவை எடுக்கக் கூடிய தைரியம் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்ததை விட அதிக லாபம் கிடைக்கும். பங்குதாரர்கள் உடைய ஒத்துழைப்பு முழுமையாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எண்ணிய எண்ணம் எல்லாம் ஈடேறும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வீண் பிரச்சனைகளை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உங்கள் வேலை உண்டு நீங்கள் உண்டு என்று இருப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகள் உடைய அனுக்கிரஹம் கிடைக்கும். நீங்கள் முன்னேற கூடிய வகையிலான சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். குடும்பத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வெற்றி அடையும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகப்பலன் உண்டாகும். வெளியிட பயணங்களின் பொழுது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களுடைய ஆதரவு கிடைக்கும். தேவையற்ற விமர்சனத்தை தவிர்ப்பது நல்லது.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. முன்பின் தெரியாதவர்கள் உடைய அறிமுகத்தை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய கனவுகள் நிறைவேறுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் தீர்ந்து ஒற்றுமை நிலவ கூடிய வாய்ப்புகள் உண்டு. புதிய நட்பு வட்டத்தை விரித்து படுத்திக் கொள்கிறார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகள் அனுகூல பலன் தரும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் வந்து மறையும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நினைத்தது நடக்கும் நன்மைகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்த லாபத்தை அடைவதில் சில சிக்கல்கள் நீடிக்கும். போட்டி, பகையாளர்களை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பொறுப்புகளை சுமக்க நேரலாம். மற்றவர்களுடைய நன்மதிப்பை பெற போராடுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.