மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்கள் மனதில் இருக்கும் பாரத்தை இறக்கி வைக்கக் கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு குடும்பத்துடன் செலவிடக் கூடிய வாய்ப்பு உண்டு. கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். தொழில் ரீதியான மாற்றம் நல்ல பலன்களைக் கொடுக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்வதை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. சுயதொழில் புரிபவர்களுக்கு லாபம் இரட்டிப்பாகும். உத்தியோகஸ்தர்கள் சமயோஜித புத்தியால் வெற்றி அடைவீர்கள்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்தது நினைத்தபடி நடக்கும். குடும்பத்தில் இறை வழிபாடுகளில் அதிக ஈடுபாட்டுடன் கடல் கலந்து கொள்வார்கள். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் மேலோங்கும் என்பதால் விழிப்புணர்வு தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு வரவேண்டிய பணம் தொகை வந்து சேரும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சோர்வுடன் இருந்து வந்த நீங்கள் உற்சாகம் அடைய போகிறீர்கள். கணவன் மனைவிக்கு இடையே வாக்கு வாதங்கள் தவிர்ப்பது நல்லது. சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீர்வுக்கு வரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தெளிவான சிந்தனை உதிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மன நிறைவு உண்டாகும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. சுயதொழில் புரிபவர்கள் தங்கள் வேலையில் கூடுதல் அக்கறையுடன் செயல்படுவது உத்தமம். கணவன்-மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். தொலை தூர இடங்களில் இருந்து சுப செய்திகளை பெறுவீர்கள்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் பெரியவர்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். சுய தொழில் புரிபவர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லை வலுவாகும் என்பதால் கவனம் தேவை.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய செய்திகளைக் கேட்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்புடைய விஷயங்களில் சாதக பலன் பெறுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு ஊடல் வந்து மறையும். நீண்ட நாள் காத்து கொண்டு இருந்த செய்தி ஒன்றை பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாளன்று அனுகூலமான நல்ல பலன்கள் கிடைக்க இருக்கிறது. பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் பனிப் போர் நிகழும். தேவையற்ற கருத்து வேறுபாடுகளை மறந்து விட்டு கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சுய தொழிலில் லாபம் உண்டாகும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்துக் காட்டுவீர்கள். தேவையற்ற பிரச்சனைகளில் சிக்கி தவிப்பதை தவிர்க்க விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. தொலை தூர இடங்களில் இருந்து நல்ல செய்தி வரும். கணவன் மனைவி உறவில் இருந்து வந்த கசப்புகள் மாறும் வாய்ப்புகள் உண்டு. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு அமைய இருக்கிறது.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கு ஆன்மீக சிந்தனைகள் மேலோங்கி காணப்படும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற கடன் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பு உண்டு.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனதில் நினைத்துக் கொண்டிருந்த விஷயத்திற்கு எதிர் மாறாக நடக்க வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் தீரும். உத்தியோகஸ்தர்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி உற்சாகம் தெரியும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நேர்மையுடன் செயல்படுவது நல்லது. இதுவரை உங்களை படுத்தி எடுத்துக் கொண்டிருந்த சில விஷயங்களுக்கு விடுதலை கிடைக்கும். கணவன் மனைவி உறவில் அன்யோன்யம் கூடும். பொது இடங்களில் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை தேவை.