மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நினைத்த வேலைகளை நினைத்த நேரத்தில் முடிக்க கூடிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கே வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைவது ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும் எனவே சகிப்புத் தன்மை தேவை.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற விமர்சனங்களை தவிர்த்து முதல் வெற்றி பாதையை நோக்கிப் பயணிப்பதே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு வீண் விரையங்கள் ஏற்படும் என்பதால் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கடந்த கால இனிய விஷயங்கள் குறித்த சிந்தனைகள் மேலோங்கி காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வாகன வீதியான வீண் விரையங்கள் ஏற்படும் என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுப்பதில் கவனம் தேவை.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் செயலில் இருக்கக் கூடிய தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். தடைப்பட்ட சில சுப காரியங்கள் கை கூடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மிக முக்கிய பொறுப்புகளில் கவனம் தேவை. முன்பின் தெரியாதவர்களின் அறிமுகத்தை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பாராட்டு கிடைக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு அரசு வழி அனுகூலம் உண்டாகும். ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகள் வந்து மறையும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கூடுமானவரை மௌனம் காப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மற்றவர்களின் உபத்திரவம் எரிச்சலூட்டும் வகையில் அமையக்கூடும். இதில் உள்ளவர்களுக்கு நீங்கள் மற்றவர்களுடைய வேலையையும் சேர்த்து செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால் நிதானம் தேவை.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய நல்ல சந்தர்ப்பங்களை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தொழிலில் இருக்கும் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்ளும் யோகம் உண்டாகும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு அதிக பணிச்சுமை ஏற்படும் என்பதால் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்படுவது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீர கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மற்றவர்களின் நன்மதிப்பைப் பெறக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாளில் எல்லாவற்றிலும் வெற்றி அடைய கூடிய நல்ல வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கான அவசிய செலவுகள் கட்டுப்படுத்துவது நல்லது. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி நடக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு புதிய பங்குதாரர்களுடன் அறிமுகம் உண்டாகும். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் திறமை உண்டாகும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வீண் விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் நல்லது. கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகளை மேலும் மேலும் பேசி பெரிதாக்கி கொள்ளாமல் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் இருக்கும் இழுபறியான சில விஷயங்கள் முடிவுக்கு வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து இட மாற்றம் குறித்த விஷயத்தில் சாதக பலன்களை பெறுவீர்கள். சகோதர சகோதரிகளுக்கு இருந்து வந்த மன கஷ்டங்கள் தீரும். பெற்றோர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது. உத்தியோக ரீதியான பிரச்சனைகள் தீரும்.