மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி நல்ல சிந்தனைகள் மேலோங்கி காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வகையிலான லாபம் உண்டாக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை கூடும் இதனால் டென்சனுடன் காணப்படுவார்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான பலன்கள் தரக்கூடிய அளவிலான அமைப்பு என்பதால் உற்சாகத்துடன் காண இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து திடுக்கிடும் செய்திகள் கிடைக்கும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுமையை கடைப் பிடிக்கக் கூடிய அமைப்பாக உள்ளது. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்வதை தவிர்ப்பது நல்லது. புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதக பலன் உண்டு. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு பயணங்களை மேற்கொள்ளும் சூழ்நிலை உண்டு.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் எதிர்க்க கூடிய வல்லமை பெறுவீர்கள். பணம் பல இடங்களிலிருந்தும் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்டநாள் பிரச்சனைகளை எதிர் கொள்ளும் சூழ்நிலை நிலவும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லை வலுவாக வாய்ப்புகள் உண்டு.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு எதிர்ப்புகள் வலுவாகும் என்பதால் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைப்பதை நடத்தி காட்டுவீர்கள். சில விஷயங்களில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்ப்பதும் நல்லது. வேலையில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் செய்யக்கூடிய விஷயங்களில் உறுதியாக இருப்பது நல்லது. எதையும் ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் நடக்கும் விஷயங்களை வெளியில் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது உத்தமம். சுய தொழிலில் லாபம் ஏறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் தேவை.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றும் தரக்கூடிய அமைப்பாக இருப்பதால் உற்சாகத்திற்கு குறைவிருக்காது. கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பங்குதாரர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நேர்மறை சிந்தனைகள் வலுவாகும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குறுக்கு வழியில் சிந்திக்க தோன்றும். தேவையற்ற சிந்தனைகளை தவிர்த்து இறை வழிபாடுகளில் ஈடுபடுவது நல்லது. புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனை தேவை. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல பலன்களை தரக்கூடிய அமைப்பு என்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணம் கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்க காலதாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன அமைதி இருக்கும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கவனம் தேவை. தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் உங்கள் வேலை உண்டு நீங்கள் உண்டு என்று இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்ப்பதை விட லாபம் இரட்டிப்பாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வார்த்தைகளில் நிதானம் தேவை.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை அடைய கூடிய வாய்ப்புகள் உண்டு. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சாதக பலன் கிடைக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் புரிதல் அதிகரிக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு அமைதி தேவை. வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்குப் பிடித்த நல்ல வேலை அமையும். ஆரோக்கியம் சீராகும்.