மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புத்தம் புதிய நாளாக உணர்வீர்கள். மனதில் இருக்கும் கவலைகள் தீர்ந்து புது உற்சாகம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளிடம் பாராட்டுகள் பெறும் வாய்ப்புகள் உண்டு. கொடுக்கப்பட்ட வேலைகளைச் சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு உங்கள் குடும்பத்தினரின் ஆதரவு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வருபவர்களுக்கு எதிர்பாராத திடீர் நிகழ்வுகள் திக்குமுக்காடச் செய்யும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிம்மதி இருக்கும். புதிதாக சொத்துக்கள் வாங்குபவர்களுக்கு ஒரு முறைக்கு பலமுறை ஆலோசனை தேவை.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய உற்சாகத்திற்கு குறைவிருக்காது. தேவையற்ற விஷயங்களை போட்டு மனதில் குழப்பிக் கொள்ளாமல் உங்கள் வேலையில் கவனம் செலுத்துவது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேல் இடங்களில் இருந்து நெருக்கடி ஏற்படலாம்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்கள் கடமையில் கூடுதல் அக்கறையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு விருத்தி உண்டாகும். தொழில் செய்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்கள் திறமைகளை நிரூபிக்க வேண்டிய நல்ல நாளாக இருக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். தேவையற்ற வெளியிட பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நீண்டநாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். விட்டு சென்ற உறவுகள் தானாகவே வந்து சேருவார்கள். மனச்சுமை நீங்கும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் கூடுமானவரை உங்களுடைய முக்கிய முடிவுகளை தள்ளி வைப்பது நல்லது. தேவையற்ற குழப்பங்களை மனதில் கொள்ளாமல் தெளிவான சிந்தனை தேவை. கணவன் மனைவி உறவில் அன்பு அதிகரிக்கும். சுயதொழில் எதிர்பார்ப்பதை விட லாபம் குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை காணப்படும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய ஆலோசனைகளை மற்றவர்களுக்கு வழங்குவதை தவிர்ப்பது நல்லது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது பல பிரச்சனைகளை ஏற்படுத்தாமல் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணம் வர வேண்டிய இடத்தில் இருந்து வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு அமைதி தேவை.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் விரும்பிய விஷயங்களை அடையப் போகிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணத் தேவை ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இழுபறியில் இருந்து வந்த வேலையைக் கூட சேர்த்து செய்து முடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் மாற்றங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். உங்களை இதுவரை புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்வீர்கள். தொலை தூர இடங்களிலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு விருத்தி உண்டாகும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய விஷயங்களை செய்வதற்கான நல்ல நாளாக அமைய இருக்கிறது. உங்களுடைய வெற்றிக்கு இடையூறாக மறைமுக எதிரிகள் தொல்லைகள் கொடுப்பர். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் துணிச்சல் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அவசரமாக பண தேவை ஏற்படலாம்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாளில் உங்கள் குடும்பத்தில் குதூகலம் காணப்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். தொலைதூரத்திலிருந்து கிடைக்க வேண்டிய செய்திகள் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கடன் தொல்லை நீங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளியிட பயணங்கள் மூலம் அனுகூல பலன் உண்டு.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகள் சாதகமான பலன்களைக் கொடுக்க இருக்கிறது. உங்கள் உடனிருப்பவர்களே உங்களுக்கு தொல்லை தரும் வாய்ப்புகள் உண்டு. எவரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். மனைவி உறவில் நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.