மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத நன்மைகள் நடக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவிக்குள் இருக்கும் பனிப்போர் முற்றுப்பெறும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்க போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகாரத்தில் உள்ளவர்களால் டென்ஷன் உண்டாகலாம்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதுமைகளை படைக்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவி ஒற்றுமையில் குறைவிருக்காது. ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் பேசுவது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சுறுசுறுப்பு இருக்கும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்ளக்கூடிய வல்லமை பிறக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வரவு உயர வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடம் மாற்றம் ஏற்படலாம்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சவாலான வேலைகளை கூட சாதாரணமாக முடிக்கக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. சுற்றி இருக்கும் பகைவர்களை இனம் காண வாய்ப்பு உண்டு. குடும்ப அமைதிக்கு வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைகள் வெளிவரும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய புதிய மாற்றம் உங்களுக்கே ஆச்சரியப்படுத்தும் வண்ணம் அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே புரிதலில் குறை உண்டாகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வார்த்தையில் கவனம் வேண்டும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற பகை வளரக்கூடிய வாய்ப்பு உண்டு என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் வீண் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்கள் தங்கள் வேலை உண்டு தாங்கள் உண்டு என்று இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய பாதை தென்படும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களை வேண்டாம் என்றவர்களும் தேடி திரிய வாய்ப்புகள் உண்டு. சுப காரியம் முயற்சிகளில் இருந்து வந்த தொய்வு நிலை மாறக்கூடும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சாதுரியமான முயற்சிகள் நல்ல பலன் தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தலைமை அதிகாரிகளால் ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய துணிச்சல் எதையும் சாதிக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சாதகமற்ற அமைப்பு என்பதால் குறுக்கு வழியில் ஈடுபடாதீர்கள். கணவன் மனைவியுடைய விட்டுக்கொடுத்து செல்லுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டி வரும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஒரு விஷயம் நடக்க வாய்ப்புகள் உண்டு. புதிய நண்பர்கள் அறிமுகம் அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சமுதாயத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உற்றார், உறவினர்களுடன் விரிசல்கள் வரலாம்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தடைகளை தாண்டி முன்னேற கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தேவையற்ற நபர்களின் விமர்சனங்களை கருத்தில் கொள்ள வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு அலைந்து திரிய வாய்ப்புகள் உண்டு. கடமையில் கண்ணியம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பயணங்கள் மூலம் திடீர் அதிஷ்டம் வரலாம்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய செலவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு என்பதால் ஆடம்பரத்தை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் முன்கோபத்தை காண்பிக்க வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உடன்பிறப்பின் மூலம் ஆதரவு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தொட்டது தொடங்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தீட்டிய திட்டங்கள் அதன்படியே நிறைவேற வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் உள்ளவர்களுடன் இணக்கமாக செல்வது உத்தமம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு செலவுகள் குறையும். வரவு அதிகரிக்க புதிய விதிகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும், நினைத்தது நடக்கும்