மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுப பலன்கள் கிடைக்கக்கூடிய இனிய நாளாக இருக்க கூடிய அமைப்பாக இருக்கிறது. சுப காரிய பேச்சு வார்த்தை முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு இனிய பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வாகன ரீதியான பயணங்களில் கவனம் தேவை.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நிதானமாக இருக்க வேண்டிய நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கிடைப்பதில் கால தாமதம் ஆகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளுங்கள்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கூட்டு முயற்சி நற்பலன்களை கொடுக்கக்கூடிய அமைப்பாக இருக்கிறது. திடீர் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தொழில்நுட்ப ரீதியான பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம் கவனம் தேவை.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கல், வாங்கல் பிரச்சனைகள் வலுவாக வாய்ப்புகள் உண்டு கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நேர்மறையான சிந்தனை அதிகரித்து காணப்படும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வெற்றியடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு குடும்ப பொறுப்புகளை அதிகம் சுமக்க வேண்டி இருக்கும். பூர்வீக சொத்துக்கள் அனுகூல பலன் கொடுக்கும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடமையில் கூடுதல் முனைப்புடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற பேச்சு வார்த்தைகளில் ஈடுபட வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் எடுக்கும் முடிவுகளில் இருந்து பின் வாங்காமல் இருப்பது நல்லது. பங்குதாரர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு தேவை. –
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் துணிச்சலான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் அகலும். மந்த நிலை மாறி சுறுசுறுப்பு உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பயணங்களின் மூலம் அனுகூல பலன்கள் பெறலாம். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்த சில விஷயங்களில் ஏமாற்றத்தை சந்திக்க கூடும் என்பதால் தேவையற்ற எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் ஒற்றுமைக்கு குறைவிருக்காது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய யுக்திகளை கையாளும் வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் திறமையை நிரூபித்து காட்டுவீர்கள்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தடைகளை தாண்டி வெற்றி அடையக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லை மறையும். கணவன் மனைவி இடையே சிறு சிறு சண்டை சச்சரவுகள் தோன்றி மறையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் ஏற்படும். ஆரோக்கியம் முன்னேற்றம் காணும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனதில் இருந்து வந்த கேள்விகளுக்கு விடையை தேடி அலைவீர்கள். எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. சுயதொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களிடத்தில் நன்மதிப்பு உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். போட்டி, பொறாமை வலுவாகும் கவனம் தேவை.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முயற்சிகளுக்கு தொடர் தடைகள் ஏற்படலாம் கவனம் தேவை. வெளியிட பயணங்களின் போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சுயதொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சாதகமற்ற அமைப்பு என்பதால் மந்த நிலை நீடிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் மூலமாக ஆதாயம் காணும் வாய்ப்புகள் உண்டு.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்க போகிறது. பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்ததை நினைத்தபடி சாதித்துக் கொள்ளும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் மேலும் வலுவாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.