மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர் வரும் சவால்களை எளிதாக போராடி வெற்றி காண்பீர்கள். சக பணியாளர்களுக்கு இடையே போட்டிகள் நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மந்த நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும். பொருளாதார ரீதியான தடைகள் விலகும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் வெற்றி வாகை சூடும் அற்புத யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெறும் சந்தர்ப்பங்கள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நண்பர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வெளியிட பயணங்களின் போது கவனம் தேவை. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் பண வரவு ஏற்படும். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு ஒரு சிலருக்கு அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் ஏற்படலாம். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேற்றுமையை பேசி தீர்த்துக் கொள்வது நல்லது.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். வேலை தேடி அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை அமையும். குடும்பத்தில் அதிருப்தி உண்டாக வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் எதையாவது சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பது உத்தமம். சவால்களை தைரியமாக எதிர்கொள்வீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிக்கலான காரியத்தை கூட சிரமமின்றி முடித்துக் காட்டுவீர்கள். சுற்றி இருப்பவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் செலுத்துங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு டென்ஷன் ஏற்படலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் மட்டும் கவனம் அதிகரித்து காணப்படும். விடா முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் குதூகலம் நிலவும். உற்றார் உறவினர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உத்யோகத்தில் இருப்பவர்கள் பழைய கடன் பாக்கிகளை தீர்க்க முயற்சி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். விட்டு விலகிச் சென்றவர்கள் தானாகவே வந்து சேருவார்கள். ஆரோக்கியத்தை கவனிப்பது நல்லது.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுபயோக வைபவங்கள் கைகூடிவரும் நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்துடன் வெளியிடங்களில் பயணம் செய்யும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தடைபட்ட காரியங்கள் நிறைவேற வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய அணுகுமுறை மற்றவர்களை எளிதில் கவரும் வண்ணம் அமைய இருக்கிறது.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புத நாளாக அமைய இருக்கிறது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பதை மனதில் கொண்டு செயல்படுவது உத்தமம். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சவாலான போட்டிகள் நிலவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக தொந்தரவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதுவும் சுலபமாக கிடைத்து விடாது. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் வலுவாக வாய்ப்புகள் இருப்பதால் மௌனம் காப்பது நல்லது.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த நாள் நீங்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையற்ற இழப்புகளை சந்திக்காமல் இருக்க கூடுமானவரை புதிய உத்திகளை கையாள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் தேவை. உங்களுடன் இருந்து கொண்டே சிலர் உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் ஒற்றுமை மேலும் வலுப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் மூலம் லாபம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வெளிவட்டார நட்பு விரியும் யோகமுண்டு. எவரையும் எளிதாக தன்வசம் இழுக்கும் உங்களுக்கு சுபகாரியத் தடைகள் விலகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் மாற்றங்களுக்கு மற்றவர்களுடைய ஒத்துழைப்பு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். புதிய புதிய விஷயங்களை கற்றுத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களுடைய சந்திப்பு அமையும். போக்குவரத்து தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.