மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய பலன்களைக் கொடுக்கக் கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்ட உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடத்தில் இருந்து வரவேண்டிய தொகை வந்து சேருவதில் காலதாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் ஏற்படும். ஆரோக்கியத்தில் பாதிப்புகள் குறையும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான பலன்கள் கிடைக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் நீங்கள் அடைய வேண்டியதை போராடித் தான் அடைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய கனவுகளை நிறைவேற்றிக் கொள்ளும் உத்வேகத்தில் இருப்பீர்கள். ஆரம்பத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. தொழில் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய மனநிலை சீரற்ற தனிமையில் இருக்கும் என்பதால் கவனமுடன் வேலை செய்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் வந்து நீங்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எல்லா இடங்களிலும் உங்களுடைய மதிப்பு உயர்வதற்கான சூழ்நிலை காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிக்கல்கள் ஏற்படும் என்பதால் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய சிந்தனைகள் உதிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல பலன்களை பெற இருக்கிறீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை வெளியிடங்களில் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அதிகம் நிதானம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற வார்த்தைகளை விட்டுவிட்டு பின்னர் சிந்திப்பதில் பிரயோஜனம் இல்லை என்பதை உணர்ந்து செயல்படுவது நல்லது.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாளில் குடும்பத்தில் அமைதி நிலவ கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. புதிய நபர்களுடைய வருகை மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும். உற்றார், உறவினர்களின் ஆதரவு பெருகும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்கள் சமயோசிதமாக செயல்படுவதன் மூலம் வெற்றி அடைய முடியும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி இருக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்குப் பிரச்சினைகள் வரலாம்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாளில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் அற்புதமான பலன்களைக் கொடுக்க இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்ட உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்ததை அடைய கூடிய பாக்கியம் உண்டாகும். உத்தியோகத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தேவையற்ற வீண்பழி ஏற்படும் என்பதால் விழிப்புணர்வு தேவை. எதிர்பார்ப்பதை விட அதிக சலுகைகள் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே பனிப்போர் நடக்கும். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாளில் நீங்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு விஷயமும் அற்புதமான பலன்களைக் கொடுக்கக் இருக்கிறது. வியாபார ரீதியான வர்த்தகம் சிறப்பாக இருக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். சுய தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஒரு சக பணியாளர்களுடன் இருந்து வந்த போட்டி பொறாமைகள் நீங்கும். ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் குறையும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் யோசிக்காமல் செய்வதை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்ட உள்ளவர்களுக்கு நன்மைகள் நடக்கும். வரவேண்டிய இடத்தில் இருந்து வரை நிதி தொகை கைக்கு வந்து சேரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு ஆடம்பர செலவுகளை தவிர்த்து கொள்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம். குடும்பத்தில் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கும் இந்த நாள் ஒன்றிரண்டு முறை சிந்தித்துச் செயலாற்றுவது நல்லது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்வதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனமுடனிருப்பது நல்லது. புதிய ஊழியர்களை பணி அமர்த்தும் எண்ணத்தில் இருப்பீர்கள். வெளிநாடு வெளியூர் தொடர்பான விஷயங்களில் சில செய்திகள் கிடைக்கப் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய கை ஓங்கி இருக்கும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் அமைதி நிலவ கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வெளியிட பயணங்கள் மூலம் அனுகூல பலன்களை பெற போகிறீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நேர்மறை சிந்தனைகள் மேலோங்கி காணப்படும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் யார் நல்லவர்கள் என்பதை இனம் கண்டு கொள்வீர்கள்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் லாபகரமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்பதைவிட சலுகைகள் அதிகரித்து காணப்படும். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்பு மேலும் பெருகும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.