மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை நினைத்தபடி சாதித்து காட்ட கூடிய சூழ்நிலை நிலவுகின்றன. எதிர்பார்த்த இடங்களிலிருந்து பண வரவு திருப்திகரமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு மன உளைச்சல் நீங்க விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் வேலை பளு அதிகரித்து காணப்படும். கணவன் மனைவி உறவில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து திடீர் ஏமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் செய்யக்கூடிய நல்ல விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தொழில் விருத்தி உண்டாகும். உத்யோகத்தில் இருப்பவர்கள் தங்கள் போட்டியாளர்களை எளிதாக சமாளித்து வெற்றி பெறுவீர்கள். தேவையற்ற கடன்களை வாங்காமல் இருப்பது நல்லது.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யாமல் இருப்பது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு உங்களை சுற்றி இருக்கும் பகைவர்களின் தொல்லை ஒழியும். தேவையற்ற நபர்களிடம் பேச்சு வார்த்தைகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது உத்தமம். ஆரோக்கியம் மேம்படும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் செய்யும் துணிச்சல் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நேர்மறையான அணுகுமுறை வெற்றி வாய்ப்புகளை கொடுக்கும். உத்யோகத்தில் உள்ளவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற பண விரயங்களை தவிர்த்து சிக்கனம் கடைபிடிப்பது உத்தமம்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாளில் எதுவும் சுலபமாக கிடைக்காது கூடுமானவரை போராட்டத்தை எதிர் கொள்ள ஆயத்தமாவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பழைய கடன் தொகைகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்கள் தங்களுக்குக் கீழ் பணிபுரியும் பணியாளர்களிடம் வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் எதிர்பாராமல் செய்யும் உதவி அனுகூல பலன்களை கொடுக்க இருக்கிறது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். உத்யோகத்தில் தங்களுடைய சக பணியாளர்களுடன் இணைந்து வந்த போட்டிகள் வலுவாக என்பதால் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயலாற்றுவது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு உங்களின் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் புதிய ஒப்பந்தங்களில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுயமாக எந்த ஒரு முடிவையும் எடுப்பது நல்லது. தேவையற்ற நண்பர்களின் அறிமுகத்தை தவிர்த்துக் கொள்வது உத்தமம். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சனைகள் சுமுகமாக பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கருணை அதிகரிக்கும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் காண விடை கிடைக்கக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் நடைபெறும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த குழப்பங்கள் தீரும். உத்யோகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சக பணியாளர்கள் உடைய ஆதரவு கிடைத்தது இடையூறுகள் ஏற்படலாம்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் படிப்படியாக நீங்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். உத்யோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். ஆரோக்கியம் சீராகும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணம் பல வழிகளிலும் வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். தேவையான இடங்களில் தேவையானதை பெறுவீர்கள். ஒரு சிலருக்கு குடும்பத்தின் மீதான பொறுப்புணர்வு அதிகரித்து காணப்படும். பிள்ளைகள் வழியில் நல்லது நடக்கும்.