மேஷம்
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத நன்மைகள் நடக்கும் இனிய நாளாக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் தேவை அறிந்து மற்றவர்கள் ஏமாற்றக் கூடும் கவனம் தேவை. சுய தொழிலில் உள்ளவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப செலவு செய்வது நல்லது. அனாவசிய ஆடம்பரம் பணத்தட்டுப்பாட்டை ஏற்படுத்தும். ஆரோக்கியம் சீராகி வரும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் திறமையை அங்கீகரிக்கவில்லை என்கிற மன சுமை ஏற்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படக்கூடும் எனினும் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை கொள்ளுங்கள்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தெய்வ வழிபாடு மன அமைதிக்கு வழிவகுக்கும். சுப காரிய தடைகள் விலகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திட்டமிட்ட காரியம் கச்சிதமாக முடிவுக்கு வரும். நண்பர்களின் ஆதரவு பெருகும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறப்பான நாளாக அமைய இருக்கிறது. எதிலும் கூடுதல் முயற்சி செய்வதால் வெற்றியை தடை இல்லாமல் அடையலாம். சுப காரிய பேச்சு வார்த்தைகள் நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வளர்ச்சி பாதையை நோக்கிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய மாற்றம் தென்படும். ஆரோக்கியம் மேம்படும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திட்டமிட்ட காரியம் சிதறாமல் வெற்றி கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவை பெறுவீர்கள். அரசியல் சார்ந்த விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வீண் வாக்குவாதத்தில் டென்ஷன் ஏற்படலாம் எனவே அவற்றை தவிர்ப்பது நல்லது.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துன்பங்கள் தொலையும் இனிய நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் முக்கிய விஷயங்களில் அலட்சியமாக இல்லாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி சுமை கூடும். முன்பின் தெரியாதவர்களிடம் எதையும் உளறி கொட்டாமல் இருங்கள். இறை நம்பிக்கை அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற மன பயம் நீக்குவது நல்லது. குடும்பத்தில் அதிக செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு எனவே சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. கணவன் மனைவி இடையே பனிப்போர் வந்து செல்லும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் உற்சாகம் தென்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்ததை அடைந்து விடுவோம் என்கிற நம்பிக்கை பிறக்கும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கவலைகள் நீங்கி குதூகலத்துடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் முக்கிய நபர்களின் வருகை அனுகூல பலன் கொடுக்கும் வகையில் அமையும். சுயதொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பேசும் வார்த்தையில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் மற்றவர்களை மட்டம் தட்டி பேச வேண்டாம். சமூக அக்கறையுடன் காணப்படுவீர்கள்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நாளாக இருக்கப் போகிறது. நீங்கள் நினைத்ததை நினைத்தபடி நடக்கும். சுயமதிப்பீடு செய்து கொள்வது நல்லது. உங்கள் தேவை அறிந்து செலவு செய்யுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொருளாதார சீராக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் ஈகோ பிரச்சனையில் இருந்து வெளிவருவது நல்லது.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குழப்பங்கள் அனைத்தும் முடிவுக்கு வரக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. உங்களை சுற்றி இருப்பவர்களை பற்றிய புரிந்துணர்வு ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும் எனவே உங்களுடைய ஆற்றலை அதிகரிப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் தேடிய முக்கிய தடயங்கள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். சகோதர, சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீர்ந்து ஒற்றுமை பாராட்டுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்த சில விஷயங்கள் விலகிச் செல்லும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய செயல்களுக்கு மற்றவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புகள் உண்டு. தடைகளை தாண்டிய வெற்றியை அடையக்கூடும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மரியாதை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களுடைய வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.