மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எங்கள் எதிர்பாராத ஒரு விஷயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். பிரிந்து சென்ற உறவுகள் உங்களைத் தேடிப் புதிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் உங்கள் திறமைகளை இன்னும் மெருகேற்றிக் கொள்ள முயற்சி செய்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தொலை தூர இடங்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும் எனவே கவனம் தேவை. தேவை இல்லாத இடங்களுக்கு பயணம் செய்வதை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமைக்கு குறைவிருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நிதானம் தேவை.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் துணிச்சலாக முடிவெடுக்க கூடிய தைரியத்துடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு தங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரத்தை பெறும் வாய்ப்புகள் அமையும். வேகத்தை தவிர்த்து விவேகம் கடைபிடிப்பது நல்லது.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சில எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேற கூடிய நல்ல வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை வெளியில் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய முயற்சிகளுக்கு கூடுதல் பங்களிப்பு அளிப்பது நல்லது. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியைத் கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் சமயோசிதமாக செயல்படுவீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்களே உங்களை தவறாக புரிந்து கொள்ள வாய்ப்புகள் உண்டு.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சரியான பாதையில் செல்லக் கூடிய முடிவுகளை எடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கிடைக்க வேண்டிய இடத்தில் இருந்து பணம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். இழுபறியில் இருந்த வேலைகள் முடிவுக்கு வரும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கவன சிதறல் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கை தேவை. பயணங்களில் புதிய நட்புகள் மலரும் வாய்ப்புகள் அமையும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் இருக்க கூடிய முடிவுகளுக்கு சாதகமான பலன்கள் உண்டு. தேவையற்ற முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவி இடையே வாக்கு வாதங்களை தவிர்க்கவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அதிக லாபம் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை கூடும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரக்கூடிய அமைப்பாக இருப்பதால் நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும். கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பங்குதாரர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு நேர்மறையான சிந்தனை காணப்படும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் குடும்பத்துடன் செலவிடக் கூடிய நல்ல அமைப்பாக உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடையும். தொலைதூரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய செய்திகளுக்காக காத்திருக்கக் கூடும். வேலையில்லாதவர்களுக்கு மனதிற்குப் பிடித்த நல்ல வேலை அமையும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்த காரியங்கள் கைகூடி வரும் யோகமுண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பண ரீதியான விஷயத்தில் வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை கூடும் இதனால் டென்சனுடன் காணப்படுவார்கள். ஆரோக்யத்தில் கூடுதல் அக்கறை செலுத்துங்கள்.