மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ரொம்பவே அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் இரட்டிப்பு லாபம் காணும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் வாய்ப்புகள் அமையும். வெளி இடங்களுக்கு குடும்பத்துடன் பயணம் செல்லும் பொழுது கவனம் தேவை. வேகம் விவேகம் அல்ல.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு திடீர் மாற்றங்கள் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை காணப்பட்டாலும் பொருள் தேக்கம் இருக்காது. தொலை தூர இடங்களிலிருந்து சுப செய்திகளை பெறுவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமைக்கு குறைவிருக்காது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத பயணங்கள் ஏற்படும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். குடும்பத்திலிருந்து வரும் குழப்பம் தொடர்ந்து நீடிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் தேவையில்லாத எதிர்பார்ப்புகளை தவிர்த்துக் கொள்வது நல்லது. வருவது வரட்டும் என்று இருந்து கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன நிறைவு இருக்கும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் யோகம் தரும் இனிய நாளாக இருக்க போகிறது. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுய தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு தீடீர் நன்மைகள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் நடக்கவே நடக்காது என்று நினைத்த ஒரு காரியம் நடக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்க்கும் தனலாபம் கிடைப்பதில் குறுக்கீடுகள் ஏற்படலாம். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து பணம் வந்து சேரும். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியம் கவனம் தேவை.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு சாதக பலன் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம் எனவே கவனமாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய குறைகளை நிறைகளாக மாற்றி காட்டுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சுறுசுறுப்பாக செயலாற்றுவீர்கள். கணவன் மனைவி இடையே நடக்கும் பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் அகன்று முன்னேற்றம் காணும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக எதிரிகள் தொல்லை வலுவாகும் என்பதால் கவனம் தேவை.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் விரும்பிய விஷயங்களை அடையும் யோகம் உண்டு. ஒரு சிலருக்கு குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு செல்லும் பாக்கியம் உண்டு. பூர்வீக சொத்துக்கள் அனுகூல பலன் தரும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் வருமானம் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை காணப்படும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் செய்யும் தொழிலே தெய்வம் என்று நினைப்பீர்கள். கடமையும், பொறுப்புணர்வும் அதிகம் தென்படும். விட்டு சென்ற உறவுகள் மீண்டும் வந்தடைய வாய்ப்புகள் உண்டு. தொலை தூர இடங்களுக்கு செல்லும் போது கவனம் தேவை. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பு உண்டாகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் புது பொலிவுடன் காணப்படுவீர்கள். திடீரென மனதில் இருந்து வந்த தொய்வு மாறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிரிகளும் நண்பர்களாக மாறும் யோகம் உண்டு. கணவன் மனைவி இடையே ஒற்றுமை நீடிக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்கள் நேர்மைக்கு தகுந்த ஊதியம் பெறுவீர்கள். சமூகத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். கணவன் மனைவி இடையே நடக்கும் பிரச்சனைகளில் மூன்றாவது மனிதர்களை சேர்க்காமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அமையும். வாகன ரீதியான வீண் விரயங்கள் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வரவுக்கு மீறிய செலவு ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத மாற்றம் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்