மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு அனுகூலமான நல்ல பலன்கள் உண்டு. நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் அதிர்ஷ்டம் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு பொழுதுபோக்கு தவிர்த்து வேலையில் கூடுதல் அக்கறை தேவை. வியாபாரத்தில் விருத்தி உண்டாகும். சுய தொழிலில் வருமானம் பெருகும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இனிய பலன்கள் கிடைக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் இணக்கம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். சுய தொழிலில் மந்தநிலை காணப்படலாம். ஆரோக்கியம் மேம்படும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு. நீங்கள் எதிர்பார்த்தது எதிர்பார்த்தபடி நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு அமையும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு சக போட்டியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு அற்புதமான பலன்கள் அமைய இருக்கிறது. நீங்கள் நினைத்ததை சாதித்துக் காட்டுவீர்கள். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் எத்தனையோ தடைகளை எதிர்கொள்ள வேண்டிவரும். உத்தியோகஸ்தர்களுக்கு நினைத்ததைவிட உற்சாகத்துடன் இருப்பீர்கள். உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் நிறைவேறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு வெளியிடங்களில் கவனம் தேவை. தேவையற்ற முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. முன்பின் தெரியாதவர்களின் அறிமுகம் தவிர்க்கவும். சுய தொழிலில் உள்ளவர்கள் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் அகலும். இந்த நாளில் இழுபறியில் இருந்து வந்த விஷயங்கள் முடிவுக்கு வரும். கணவன் மனைவி ஒற்றுமைக்கு குறைவிருக்காது. தொலைதூரப் பயணங்களை தவிர்க்கவும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சாதகப்பலன் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு பொறுமை தேவை.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரித்து காணப்படும். நீங்கள் நினைத்ததை விட அதிக லாபம் காண கூடிய யோகம் உண்டு. புதிய புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் செலுத்துவீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை நீடிக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் குறையும். உணவு கட்டுப்பாடு மேற்கொள்வீர்கள். சுய தொழிலில் ஏற்றம் காண கூடிய அற்புத யோகம் உண்டு. புதிய யுத்திகளை கையாளுவதன் மூலம் முன்னேற்றம் பெறலாம். உத்யோகஸ்தர்களுக்கு வேலையில் கூடுதல் நாட்டம் ஏற்படும். துணிச்சலான நாளாக இருக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் முன்னேற்றத்தை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைக்கும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லை வலுவாகும் என்பதால் கவனம் தேவை. தடைகளை தகர்த்தெறிந்து வெற்றியை நோக்கி பயணிப்பீர்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் கவனம் தேவை. தேவையற்ற இடங்களுக்கு பயணம் செய்வதை தவிர்க்கவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை மாறும். உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் நட்புறவை மேம்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வலிய திறமைகளை மேலும் வெளிக்கொணர கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். கணவன் மனைவி ஒற்றுமைக்கு இடையே இடையூறுகள் ஏற்படலாம். சக நண்பர்கள் உடைய ஆதரவு கிடைக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு நீங்கள் எதையும் எதிர்கொள்ளக்கூடிய தைரியத்தை வளர்த்துக் கொள்வீர்கள். தேவையற்ற விமர்சனங்களை காதில் போட்டுக் கொள்ளாமல் இருப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் அகலும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மன அமைதி தேவை.